நிகரற்ற நடிகர் சிவாஜி கணேசன்! Sivaji Ganesan
நிகரற்ற நடிகர் சிவாஜி கணேசன்! ஆங்கிலத்தில்:முனைவர்.எஸ்.பத்மப்ரியா, எழுத்தாளர், சிந்தனையாளர், சென்னை தமிழாக்கம்: முனைவர் என் வி சுப்பராமன், சென்னை ‘செவாலியர்; ‘சிவாஜி; கணேசன் ஓர் உயர் இரகத்தைச் சார்ந்தவர். ஒரு நாடக மேடையில் இந்தியாவின் மாபெரும் , மராட்டிய மாமன்னன் சிவாஜி வேடத்தில் நடித்ததினால் ‘சிவாஜி; கணேசன் என்ற பெயர் பெற்றார். நாடக மேடையில் நடிகராக வேண்டும் என்று வீட்டை விட்டுப் புறப்பட்ட ஒருவருக்கு திரை உலகப் பயணம் மிகவும் நீண்டதாகவும்,, புகழ் வாய்ந்ததாகவும் அமைந்தது. பாதையில் பல இன்னல்களைச் சமாளித்தவர். தமிழ்த் திரை உலகில் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தவர். தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழக முதல்வராக இருந்து , இலவசக் கல்வி வழங்கிய, மிக உயர்ந்த தமிழக அரசியல் தலைவர் திரு காமராசருடன் இணைந்து இருந்தவர். அரசியல் ரீதியில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனோ, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தோ விலகி நின்றவர். தமிழக தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு சூரக்கோட்ட...