நிகரற்ற நடிகர் சிவாஜி கணேசன்! Sivaji Ganesan

 

நிகரற்ற நடிகர் சிவாஜி கணேசன்!




          ஆங்கிலத்தில்:முனைவர்.எஸ்.பத்மப்ரியா,

எழுத்தாளர், சிந்தனையாளர், சென்னை

தமிழாக்கம்: முனைவர் என் வி சுப்பராமன், சென்னை 


‘செவாலியர்; ‘சிவாஜி; கணேசன் ஓர் உயர் இரகத்தைச் சார்ந்தவர். ஒரு நாடக மேடையில் இந்தியாவின் மாபெரும் , மராட்டிய மாமன்னன் சிவாஜி வேடத்தில் நடித்ததினால் ‘சிவாஜி; கணேசன் என்ற பெயர் பெற்றார். நாடக மேடையில் நடிகராக வேண்டும் என்று வீட்டை விட்டுப் புறப்பட்ட ஒருவருக்கு திரை உலகப் பயணம் மிகவும் நீண்டதாகவும்,, புகழ் வாய்ந்ததாகவும் அமைந்தது. பாதையில் பல இன்னல்களைச் சமாளித்தவர். தமிழ்த் திரை உலகில் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தவர். தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழக முதல்வராக இருந்து , இலவசக் கல்வி வழங்கிய, மிக உயர்ந்த தமிழக அரசியல் தலைவர் திரு காமராசருடன் இணைந்து இருந்தவர். அரசியல் ரீதியில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனோ, அகில இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்திலிருந்தோ விலகி நின்றவர்.  

தமிழக தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு சூரக்கோட்டையில் வி. சின்னையா மந்திரையர் என்ற பெயரில் பிறந்தவர் சிவாஜி கணேசன். நாடக நடிகராகத் தனது வாழ்க்கையைத் துவங்கினாலும், தமிழ்த் திரை உலகம் அவர் பெயரை ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கச் செய்தது. தமிழ்த் திரையில், எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாடக அரங்கின் பின்புலம் அவரைச் சிறப்பான திரைநடிகராக மாற்றியது. அவரது மிக முக்கியமான திரைப்படங்கள் 1952ல் “பராசக்தி”, 1954ல் “அந்த நாள்”, 1958ல் “உத்தம புத்திரன்”, 1959ல் “வீரபாண்டிய கட்டப்பொம்மன்”, 1965ல் “திருவிளையாடல்” 1968ல் “தில்லானா மோகனாம்பாள்”, 1969ல் “தெய்வ மகன்” போன்றவை..  


அவரது நாடகவாழ்வில் பெண் வேடங்களில் அடிக்கடி நடிப்பார். அந்த அனுபவத்தின் தாக்கமாக, அவரது நடை தனித்துவம் பெற்றது. அவருடைய நடைகண்டு, அவரது இரசிகர்கள் புளகித்தனர்.  பல வேடங்களில் நடித்து, மிகச்சிறந்த நடிகரானவர். 1952ல் பராசக்தி  திரைப்படத்தின்வழி முதலில் திரைநடிகர் வாழ்வைத் துவக்கியவர். இந்தக்கதை உலகப்போரில் இந்திய்ச் சரித்திரத்தையும், மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் குறித்தமுறையில் வியப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தது.  கதை முழுமையும் சமுதாய, மனோதத்துவச் செய்திகள் விரவிநின்றன. தமிழகத்தின் பின்னாளைய முதல்வர் கருணாநிதி உரையாடல் எழுதியிருந்தார்.  குறிப்பாக, நீண்ட, கேட்டவர்களை மயங்க வைக்கும்படியாக அமைந்திருந்த ”பராசக்தி” திரைப்பட உரையாடல், மு.கருணாநிதி, சிவாஜி கணேசன் இருவர் பெயர்களும் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானவை. தமிழ்த் திரைப்படத்தில் இந்த உரையாடல், மிகச் சிறந்த உரையாடலாகச்  சரித்திரம் படைத்தது.  


மிகப்பொருள் பொதிந்த திரைப்படங்களில் திரு சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார். நேர்மையையும், வீரத்தையும் வெளிப்படுத்தும்விதத்தில் இப்படங்கள் அமைந்தன. வீர பாண்டிய கட்டப்பொம்மன், மனோகரா, ராஜ ராஜ சோழன் ஆகியவை மகுடம் சூட்டியவை. வீரத்தை வெளிப்படுத்தும் கட்டப்பொம்மன், கர்ணன், ராஜ ராஜ சோழன் ஆகிய படங்களில் எந்த ஆர்பாட்டமும் இல்லாது, இயற்கையாக நடித்துள்ளார்..  தமிழ் நடிகர் நாகேஷோடு இணைந்து அருமையாக நடித்தார். பல தமிழ் திரைப்படங்களில் அவர் ஹீரோ, நாகேஷ் நகைச்சுவை நடிகர். திரைப்பட நடிகராக ராஜ ராஜ சோழனில் குந்தவையின் தந்தைபோன்ற பல நினைவில் நிற்கும் பொறுப்பில் நடித்திருக்கிறார். தனது திரைப்படங்களின் மூலம், சமுதாயச் சிந்தனைகளை சமூகத்தில் பரப்பும் சமுதாயச் சீர்திருத்த வாதியாய் இருந்திருக்கிறார். ஒரு சாமானியனை, எவ்வாறு சமூக அரசியல் அமைப்புகள் தாக்கியுள்ளது என்பதை ”பராசக்தி” திரைப்படம் உணர்த்துகிறது. சாதாரண மனிதர்களிடத்தில் ஒரு போர் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறோம். பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டப் பொம்மன், பாசமலர், ராஜ ராஜ சோழன் உரையாடல்கள் இன்றும் பொருத்தமானவையே. சிவாஜி கணேசனுடைய, நாக்குத் திறன், நீண்ட உரையாடல்களைச் செய்யும் யானை போன்ற நினைவுத்திறன், அனுபவிக்கத்தக்க குரல், கம்பீரமான பார்வை, உணர்ச்சியூட்டும் ஆளுமை அனைத்தும் புகழ்பெற்றவை. சிவாஜி கணேசனுக்கும், கருணாநிதிக்கும் பெரிய தொடர்பு உண்டு. நடிகர்களுக்கு இடையில் சிவாஜி கணேசன் ஓர் அரசன்! அவரது புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன்  திரைப்படத்தில்  , நீண்ட உரைநடையும், அருமையான வீரம் நிறைந்த நடிப்பும்  நடிகர் சக்கரவர்த்தி என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. அதாவது நடிகர்களிடையே மன்னர் மன்னன்!  ”ராஜ ராஜ சோழன்”  திரைப் படத்தில் சிவாஜி கணேசன் கிட்டத்தட்ட  ‘ராஜ ராஜ சோழனாகவே’ மாறிவிட்டதைக் காணலாம்! மக்கள் நலனுக்காகவே உழைத்த, பெரும்

 வீரரான, அவருடைய நாட்டில் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை அனைத்தையும் ராஜ ராஜனாக நடித்த சிவாஜி கணேசனுடைய மறக்க இயலாத அரசனுக்கும் சிற்பிக்கும் இடையே நடந்த உரையாடலில் காணலாம், உணரலாம், கேட்கலாம்!  உயர்ந்த கலாசார, சரித்திரச் சிறப்பு வாய்ந்த சோழ ஆட்சிக்கு இத் திரைப்படம் இறவாப் புகழைத் ஈட்டித் தந்தது

இந்தப் படத்தின் பாடல்கள் அற்புதமானவை. உணர்ச்சியைத் தூண்டிவிடும் பல உரையாடல்கள் வீரபாண்டிய கட்டப் பொம்மன் படத்தில் கேட்கலாம். இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே நாட்டுப் பற்றைப் போதிக்கும் உயர்ந்த படம் இது. பிரிட்டிசாரின் பிரிவினைச் சூழ்ச்சியையும், நமது துரோகிகளின் பொறாமையையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது. அருமையான சரியான உரையாடலும், அந்த அந்தப் படத்திற்குகந்த அவருடைய உடுப்புக்களும் உண்மையிலேயே வியத்தற்குரியன.. சிவாஜி கணேசன் பிறந்ததே மன்னர்களின் வேடம் தாங்கி நடிப்பதற்கே! கர்ணன், வீரபாண்டிய கட்டப் பொம்மனாகிய வேடங்களில் நடிப்பு எனத்தெரியாதவாறு உண்மை உருவங்களாகவே அமைந்தது நினைவிற்குரியவை. சிவாஜி சிவன், கர்ணன் போன்ற புராணபுருஷர்கள் வேடத்திலும், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற சரித்திர நாயகர் வேடத்திலும், மிக அருமையாக நடிக்கும் திறன் அமையப் பெற்றிருந்தார். அவருடைய நடிப்பு உறுப்பினர்கள் உயிருடன் இருப்பவர்கள் போன்றே இருக்குமாறு அமைந்தது. மக்களை சிரிக்கவும், அழவும், கோபம்கொள்ளுமாறும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துமாறும் தனது நடிப்பால்  செய்யமுடிந்தது. 


   திருவிளையாடலில் கணேசன் மிகுந்த ஆற்றலோடும், வலிமையோடும் நடித்திருக்கிறார். சிவனுடைய வேடத்தில் மிகவும் கண்ணியமாகவும், பண்பட்டவாறும் நடித்துள்ளார். மேலும் ’கந்தன் கருணை’ போன்ற சிறந்த  படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தில் “வீரபாகு” வேடம் ஆச்சரியப்படும் அளவில் இருந்தது. ’பாச மலர்’  படத்தில் இதுவரை நடித்திராத அளவு அருமையாக நடித்தார். அண்ணனாக நடித்தது நமது மனதைவிட்டு இன்றும் மறையவில்லை.  அப்படத்தில் அதிஉன்னதமான நடிகை சாவித்திரி, தங்கையாக அருமையாக நடித்துள்ளார். அண்ணன் தங்கை உறவில் நடிக்க இருக்கும் எதிர்கால நடிகை நடிகர்களுக்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது பாசமலர் நடிப்பு. உண்மையான அருமையான அண்ணன் தங்கை உறவினைக் காட்டுகிறது.  


    நடிப்பில் இமையம் என்று பொருள் படுமாறு அவர் “நடிகர் திலகம்” என்று அழைக்கப்பட்டார். 1995ஆம் ஆண்டில் ஃப்ரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான “செவெலியர்” விருது பெற்றார். 1996ஆம் ஆண்டு இந்திய திரைப்பட உலகின்  மிக உயர்ந்த விருதான “தா தா சாஹெப் பல்கே’ விருதினால் அலங்கரிக்கப்பட்டார். எத்தகு பல்திறப் புலமை வாய்ந்த நடிகர் சிவாஜி கணேசன்! திருவிளையாடல் படத்துச் சிவனைப்போன்ற பாத்திரத்திலிருந்து பாசமலர் தொழிலாளி முதல் பணக்காரப் பாத்திரம்வரை எந்தப் பாத்திரத்திலும் நடிக்கும் திறமை பெற்றவர் அவர். எந்த வேடத்திலும் ஒரேவிதமாக, நிலையாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர் சிவாஜி கணேசன். பராசக்தியோ, வீரபாண்டிய கட்டப்பொம்மனோ, ராஜ ராஜ சோழனோ திருவிளையாடலோ, பாச மலரோ தெய்வமகனோ அவரது நடிப்பு நிலையானதாக அமைந்தது. தனது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் தனது திறமைப் பட்டியலால்! இந்தியத் திரை உலகிலும், உலகத் திரைஅரங்கிலும் தன்நிகரில்லா நடிகனாக விளங்குகிறார்.

Comments

Popular posts from this blog

Poem: The Breaking of the Bastille

உலக தொலைநோக்கு பார்வையாளர் - பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஜி